உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிடுவோருக்கு சிறைத் தண்டனை!!

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரை செய்யும் நபருக்கு எதிரான அவசர கால சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியும் குற்றமிழைத்தவர்களாக காணப்படும் பட்சத்தில் மூன்றுக்கும் ஐந்து வருடத்துக்கும் இடைப்பட்ட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சில நபர்கள் முன்னெடுக்கும் உண்மைக்கு புறம்பான பரப்புரைகளினால் கொட்டாஞ்சேனை பொது மக்கள் பதற்றத்துக்கு உள்ளான சம்பவங்கள் பல பதிவானதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் மற்றும் முகநூல், வட்ஸ்அப், கீச்சகம் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் ஊடாக இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்னெடுத்த நபர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்களின் காரணமாக பொது மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகுதல் மற்றும் பீதிக்குள்ளாவதுடன் பாதுகாப்பு பிரிவும் தவறான வழியில் இட்டு செல்லப்படக்கூடும்.

இதனால் இவ்வாறன நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுமாறு தேசிய ஊடக மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor