தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர்: வட மாகாண ஆளுனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளே பின்பற்றி வருவதாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கொள்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். தமிழ் இனவாதிகள், அப்பாவி இளைஞர் யுவதிகளை பகடைக் காய்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கூட்டமைப்பினர் மீண்டும் புலிகளின் கொள்கைகளை முன்னெடுத்து அதன் மூலம் அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதேவேளை, வடக்கிலிருந்து முழுமையாக படையினரை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கில் ஐந்து சிவிலியனுக்கு ஒரு படைவீரர் என்ற கணக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்யப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது. வடக்கில் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடாத்த எவ்வித தடையும் கிடையாது.

எனினும், சமாதானத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor