புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு விலைகுறைப்பு

தமிழ்- சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் அறிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கும் அமைய, நடைமுறைக்கு வரும் இந்த விலைக்குறைப்பானது நேற்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய உள்ளூர் சம்பா அரிசி -84 ரூபாய், சிவப்பு அரிசி – 57 ரூபாய், வெள்ளைப்பச்சை அரிசி – 67 ரூபாய், வெள்ளைச்சீனி- 97 ரூபாய், நெத்தலி- 669 ரூபாய், பெரிய வெங்காயம்- 74 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 15 சதொச கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது 411 ஆக இருக்கும் சதொச கிளைகள் இவ்வருட முடிவுக்குள் 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor