எரிபொருளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாயினால் அதிகரிப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 137 ரூபாயாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாயினால், அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 157 ரூபாயாகும்.

ஒடோ டீசல் லீற்றரொன்றின் விலை ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒடோ டீசலின் புதிய விலை 104 ரூபாயாகும்.

சூப்பர் டீசல் லீற்றரின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 134 ரூபாயாக அமைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor