கனடா உறங்காவிழிகள் உதவி நிறுவனத்தால் பான்ட் வாத்தியங்கள் அன்பளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் கல்வி வலயத்திலுள்ள உயிலங்குளம் அ.த.க. பாடசாலைக்கு பான்ட் வாத்தியங்களும்,அலுமாரி,மாணவர்களுக்கான டினபோம் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்பட்டன.

வன்னியிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஒன்றாகிய உயிலங்குளம் .அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் குடும்பபொருளாதரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கனடா உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி உதவி வழங்கும் தாயகத்திலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய கிறீன் பியூச்ச நேசன் பவுண்டேசன் நிறுவனமானது கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தினூடாக மேற்படி உதவிகைளை வழங்கியது.

மேற்படி பொருட்களை கையளிக்கும் நிகழ்வு 06-02-2019 புதன்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிழக்வில் துணுக்காய் கோட்ட கல்வி பணிப்பாளர் மதிப்பிற்குரிய செல்வரத்தினம் அவர்களும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகரும் செயற்பட்டு மகிழ்வோம் திட்ட இணைப்பாளருமான திரு.அன்ராசா ஆசிரியர் அவர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிறீன் பியூச் ச நேசன் பவுண்டேசன் நிறுவன தலைவர் செ.கஜேந்திரன், கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுடையோர் சங்க தலைவர் பசுபதி உமாகாந்தன், அந்நிறுவன பொருளாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor