தெஹிவளையில் மீண்டும் பொலிஸ் பதிவு!- மக்கள் அவதி

பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களை பதிவுசெய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், தமிழ் மொழியிலான விண்ணப்பங்களை மக்கள் கோரிய போதிலும் தற்போதைக்கு ஒரு மொழியிலேயே விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும் அதனை பூர்த்தி செய்து தருமாறும் பொறுப்பற்று பதிலளித்துள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரின் இச்செயற்பாட்டினால் தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor