தமிழகத்திலிருந்து ஒருதொகுதி இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கையைச் நேர்ந்த 42 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

19 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மூன்று விமானங்களில் இவர்கள் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.

மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தினால் இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor