சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம்: பொதுஜன பெரமுன

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித்த அபேகுணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டனர். இதனால் சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித்த மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

இரு தரப்பினரும் ஒரே கொள்கையுடன் செயற்படுவதாக குறிப்பிட்ட ரோஹித்த அபேகுணவர்தன, தற்போது இரு தரப்பிற்குமிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடல்கள் எதிர்கால செயற்பாடுகள் குறித்ததென்றும், இவ்வாரம் முக்கிய தீர்மானங்கள் எட்டப்படலாமென்றும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor