மஹிந்தவிடம் நிபந்தனை விதித்த கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கைகள் முன்வைக்காதது ஏன்?: தவராசா

அரசியல் நெருக்கடியில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஐபக்ஷவிடம் நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் எவை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஐனநாயக முறையில் செயற்படுத்தப்பட்டிருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும். ஆனால் செயற்படுத்தப்பட்ட முறையில் தான் கேள்விக்குறி இன்றைக்கு இருக்கிறது.

ஆனால் இதில் பிரதமரை நீக்குவதற்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஐனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால் அச்சட்டத்தின் பிரகாரம் சிங்கள முறையில் உள்ள அடிப்படையில் நீக்கும் அதிகாரம் ஐனாதிபதிக்கு இருக்கின்றதென இன்னொரு தரப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே அரசமைப்பை மீறி பிரதமர் நீக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

இன்றைக்கு மஹிந்தவிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்த கூட்டமைப்பு அற்கு மகிந்த சம்மதிக்காததால் அவரை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக கூறியிருக்கின்றது.

அவ்வாறாயின் ரணில் விக்கிரமசிங்க அல்லது அவர் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதாயின் அவரிடம் முன்வைத்த நிபந்தனைகள் என்ன. எத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

உறுதிமொழிகள் பெறப்பட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது. அத்தோடு ஏன் உறுதிப்பாடுகள் பெறப்படாமல் விடப்பட்டது என்ற கேள்வியும் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor