தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்!!

புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வர்த்தக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் மற்றும் வருமான வழியை ஏற்படுத்தி வடக்கு மாகாணத்தில் நிலையான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக ஏற்றுமதி சந்தையில் ஈடுபடக்கூடிய வகையில் தொழில் சேவை திட்டங்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கு மிகவும் இலகுவாகவும் பயனுள்ள வகையிலும் தமது அலுவலகங்களை பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சேவைகளை வழங்குவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்று இலங்கை – இந்திய அரசுகளின் நிதிப் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது” என்று அமைச்சரவை முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனம்(NCIT)  வடக்கில் தகவல்தொழில்நுட்பத்துறையினை வளர்க்க தகவல் தொழில்நுட்ப வலயம் ஒன்றை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி  அது  தொடர்பிலான  திட்ட முன்வரைபு ஒன்றை மாவட்டச்செயலகத்தில் அண்மையில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேற்படி திட்டவரைபு மெருகூட்டப்பட்டு பிரதமர்  வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளன பிரதிநிதிகள் யாழ் மாவட்டச்செயலகத்தில் உதவி மாவட்டச்செயலரிடம் தங்கள் திட்ட முன்வரைவை சமர்ப்பித்தபோது

”வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளன பிரதிநிதிகள் யாழ் மாவட்டச்செயலகத்தில் உதவி மாவட்டச்செயலரிடம் தங்கள் திட்ட முன்வரைவை சமர்ப்பித்தபோது”

Recommended For You

About the Author: Editor