பலாலியை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை – அமைச்சர்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, விமல் வீரவன்சவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வோம். அதேவேளை உள்நாட்டு விமானசேவையை பலப்படுத்த வேண்டியுள்ளது.

அந்தவகையில் பலாலி மட்டுமன்றி கண்டி திகன உட்பட ஏனைய பகுதிகளிலும் விஸ்தரிப்பு நடவடிக்கை இடம்பெறும்.

பலாலி விமானநிலையத்தின் அபிவிருத்திப்பணியைகூட இந்தியாவிடம் கையளிக்க நாம் விரும்பவில்லை” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய சிவில் விமான சேவைகள் அதிகார சபை தயாராகிவருவதாக “த டைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor