பலாலிக்கான வானூர்திப் பாதை வரையும் பணிகள் ஆரம்பம்!!

பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்­கான வானூர்­திச் சேவை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தால், பலாலி வானூர்தி நிலை­யத்­துக்கு வானூர்­தி­கள் வருகை தரும், வெளிச் செல்­லும் பாதை வரைபடம் வரை­யும் பணி, சிவில் வானூர்­திப் பணி­ய­கத்­தால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அடிப்­ப­டைத் தேவை­களை மாத்­தி­ரம் முத­லில் பூர்த்தி செய்து தமி­ழ­கத்­துக்­கான வானூர்­திச் சேவையை பலா­லி­யி­லி­ருந்து ஆரம்­பிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

தமி­ழ­கத்­துக்­கான வானூர்­திச் சேவை ஆரம்­பிக்­கப்­பட்ட பின்­னர் பிராந்­திய வானூர்தி நிலை­யத்­துக்­கு­ரிய கட்­டு­மான அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­வது என்று யாழ்ப்­பா­ணத்­தில் நடந்த உயர்­மட்­டக் கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

பலாலி வானூர்தி நிலை­யத்­திற்கு வானூர்­தி­கள் வரு­வ­தற்­கான பாதை, பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து வானூர்­தி­கள் வெளி­யே­றும் பாதை என்­ப­வற்றை வரை­யும் பணி­களை சிவில் வானூர்­திப் பணி­ய­கம் ஆரம்­பித்­துள்­ளது.

பலாலி வானூர்தி நிலை­யத்­தைச் சுற்­றி­யுள்ள மக்­கள் குடித்­தொகை, உயர்­மின்­அ­ழுத்த தடம் செல்­லும் பாதை உள்­ளிட்ட விவ­ரங்­க­ளைப் பெற்று, பாதை வரை­ப­டம் வரை­யும் பணி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, கட்­டு­நா­யக்கா பன்­னாட்டு வானூர்­தித் தளத்­தி­லுள்ள கரு­வி­க­ளை­விட, அதி நவீன கரு­வி­களே பலாலி வானூர்­தித் தளத்­தில் பொருத்­தப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் சிவில் வானூர்­திப் பணி­யக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

Recommended For You

About the Author: Editor