யாழில் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய வர்த்தக தொகுதி!

யாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் புதிய வர்த்தக தொகுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அதனை கட்ட முயாத நிலையில், குறித்த நிதி மீளப்பெறப்பட்டது. இந்தநிலையில் இதனை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

இதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தக தொகுதியினை நிர்மாணிப்பதற்கான நிதியினை ஒக்கீடு செய்வதாக பிரதமர் தெரிவித்தார். இதுதொடர்பில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் நாம் பங்கேற்றிருந்தோம்.

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த வர்த்தக தொகுதியினை நிர்மாணிப்பதற்குரிய பூர்வாங்க பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது’ என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor