மயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்!

யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் குறித்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய நவீனமயப்படுத்தப்படவுள்ள மயிலிட்டி துறைமுகப் பகுதியை மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அதிகாாிகள் நேற்று (வியாழக்கிழமை) சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர், வலி,வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

மயிலிட்டி துறைமுகத்தை ஆழப்படுத்துதல், மீன்பிடி படகுகளுக்கான எரி பொருள் நிரப்பு நிலையம் அமைத்தல், மீனவர்களுக்கான மலசலகூடம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளே ஆரம்பகட்டமாக அங்கு முன்னெடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor