யாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஜயசூரிய (வயது -26) மற்றும் சண் ருவான் (வயது – 26) ஆகிய இளைஞர்களே கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீட இறுதி வருடத்தில் கற்கும் குறித்த மாணவர்கள் சமீபகாலமாக இரண்டு தரப்புகளாக இயங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று பகல் இருதரப்பினருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது இரு மாணவர்களை சக மாணவன் கத்தியால் குத்தியதாக அறிய முடிகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor