நினைவேந்தல் நிகழ்வில் மாலை மரியாதையை எதிர்பார்க்க கூடாது: முதலமைச்சர்

நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்றது. இங்கு மாலை மரியாதை அளித்து மேள தாளத்துடன் அழைத்து செல்வார்களென எதிர்ப்பார்க்க கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண சபையின் 123 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கென மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்பி தருமாறு கோரி இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நினைவேந்தல் என்பது மரண வீட்டுக்கு செல்வது போன்ற ஒரு நிகழ்வாகும்.

இதன்போது ஏனைய நிகழ்வுகளுக்கு அளிக்கப்படும் மேள தாளத்துடன் கூடிய மரியாதை வழங்கப்படுமென எதிர்பார்த்து செல்லக் கூடாது.

மேலும் இம்முறை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அமைக்கப்பட்ட பந்தல்கள் , அப்பகுதியை துப்பரவு செய்தமை , குடிக்க நீர் வழங்கியமை போன்ற செலவுகள் மாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது” என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor