20,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

அரச சேவையில் 20,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளே, எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் மே மாதம் 05ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor