9 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய தந்தை கைது

தனது 9 மாதக் குழந்தையை தலைகீழாகப் பிடித்து தாக்கியதுடன் மனைவியையும் கடுமையாகத் தாக்கிய யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை, நேற்று காலை கைது செய்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவாகியிருந்த மேற்படி சந்தேகநபர், இராஜகிராமம் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை (11) காலை வந்திருந்த சமயம் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்தில் இராஜேஸ்வரன் தமிழ்ச்செல்வி (வயது 27) மற்றும் அவரது குழந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.