யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்!

”காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்ததியை எதிர்நோக்கிய நிலைபேறான விவசாயம்” எனும் தொனிப்பொருளில் யாழில் விவசாயக் கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது.

மாகாண விவசாய அமைச்சினால் யாழ். திருநெல்வேலி விவசாய பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சார்பாக கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆரம்பித்துவைத்தார்.

யாழ்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு காட்சிக்கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் நவீன விவசாய முறைகளின் செயன்முறை விளக்கங்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெல் ஆராட்சி மற்றிம் விதை பாதுகாப்பு தொடர்பிலும் விளிப்புனர்வை ஏற்படுத்தும் செயற்திட்டங்களும் இங்கு முன்னெடுக்கப்படுகிறது.

இன்று தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியை பார்வையிட வடக்கு மாகாண பாடசாலை மாணவர்கள் அழைத்துவரப்படவுள்ளதுடன் நாட்டின் சகல பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களும் இதில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண விவசாயபணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாயம் கமநல சேவைகள் அமைச்சர் க.சிவநேசன் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor