தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் எழுச்சியுடன் ஆரம்பம்

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் உருகி தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூர் தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் காலை 10.10 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக கடந்த 23 ஆண்டுகளாக அரசியல் கைதியாக சிறையில் வாடும் பார்த்தீபன் அவர்களின் அன்புத்தாயாரினால் தியாக தீபத்திற்கு ஈகச் சுடரேற்றப்பட்டு, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து பொது மக்கள், கட்சிகளின் அங்கத்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

நினைவுரைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

Recommended For You

About the Author: Editor