அமிர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை!

மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் 90வது பிறந்தநாள் நினைவுப் பேருரையும் ‘இலட்சிய இதயங்களோடு’ நூல் வெளியீடும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

அமரரின் உருவப் படத்துக்கு சட்டத்தரணி கனக. மனோகரன் மலர் மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்விற்கு மதத் தலைவர்கள், வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor