யாழ். சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்படவிழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த திரைப்பட விழா யாழ்ப்பாணம் மெஜஸ்டிக் திரையரங்கில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

மூன்றாவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 25 நாடுகளைச் சேர்ந்த 100 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் குறுந்திரைப்படங்களும் ஆவணப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இளம் படைப்பாளர்களையும், சிரேஷ்ட சினிமாத்துறை கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் இறுதி நாள் நிகழ்வில் விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor