யாழில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர தினம்

இந்திய சுதந்திர தின நிகழ்வுகள், யாழ்ப்பாணத்திலும் இன்று நடைபெற்றன.

யாழில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆ.நடராஜனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது இந்திய துணைத் தூதுவர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, தொடர்ந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீட மாணவர்களது பரதநாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின செய்தியை இந்திய துணை தூதுவர் வாசித்தார்.

இந்நிகழ்வில், சர்வ மதத் தலைவர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெயசேகரம், யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்னம், அரச அதிகாரிகள் மற்றும் இலங்கை வாழ் இந்திய மக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor