வலி வடக்குப் பிரதேச நிர்வாகம் மீதுபொது மக்கள் அதிருப்தி

அளவெட்டி வடக்கு கிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வுக்கு வலி வடக்குப் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆன உதவிப்பிரதேச செயலர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அழைப்பிதழில் அவர்களது சம்மதத்துடன் அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளாமை பொதுமக்களை விசனத்துக்குள்ளாக்கியது.

பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கு அமையவே அவர்கள் கலந்து கொள்ளவில்லை என பின்னர் அறியக்கூடியதாகவிருந்தது.

ஐநூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் வறுமைக்கு கோட்டுக்குட்பட்ட 30 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் 300 மாணவர்களுக்கு காலணிகளும் முதியவர்களுக்கு போர்வைகள் உள்ளிட்ட உடுபுடவைகளும் இரண்டு பெண்தலமைத்துவ குடும்பங்களுக்கு பசு மாடுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அளவெட்டியைச் சேர்ந்த புலம்பெயர் மக்கள் மற்றும் அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் நிதியுதவியுடனேயே இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் உரையாற்றிய அளவெட்டிக் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்து கொள்ள தனிப்பட்ட சில காரணங்களுக்காக பிரதேச செயலர் மறுப்புத் தெரிவித்தமையையும் ஏனைய அதிகாரிகளை கலந்து கொள்ளவிடாது தடுத்தமையையும் சுட்டிக் காட்டி தமது அதிருப்தியை வெளியிட்டு உரையாற்றினர். கிராமசேவையாளர்களின் பணிகளுக்கு ஊக்கம் கொடுத்து தட்டிக் கொடுக்க வேண்டிய உயர் அதிகாரிகள் அத்தகைய பணிகளுக்கு முட்டுக்கட்டையாகவிருப்பது கவலையளிப்பதாகவுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டனர்.

வலிவடக்குப் பிரதேச செயலரை இடமாற்றக் கோரி பொதுஅமைப்புக்கள் சில அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையியே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்தது.

a2

Recommended For You

About the Author: Editor