7 தற்கொலை குண்டுதாரிகள் கைது!

அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் உயிர்த்த் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிமின் நெருங்கிய உதவியாளர்களென தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு சஹரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு அவர்களுக்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் நசார் மொஹமட் ஹசாத் பயிற்சிகளை வழங்கி வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாட்களாக அளிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.