யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் மா அதிபர் விஜயம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார்.

அண்மை காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் சமூக சீர்கேடுகள் தொடர்பாக பதவியேற்றுள்ள பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் நிலைமைகளை விளங்கி குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சரியான ஒரு முன்நகர்வை மேற்கொள்ளவேண்டும் என தமிழ் சிவில் சமூகங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் முதல் சந்திப்பாக வடமாகாண பொலிஸ் அதிகாரிகளை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்துச் சந்தித்தார். வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

police-event-3

police-event-2

police

Recommended For You

About the Author: Editor