வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை இன்று புதன்கிழமை காலை பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

event-162016

வாக்காளர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தேர்தல்கள் திணைக்களத்தினால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து இன்று 8.45 அளவில் ஆரம்பமான பேரணி, வைத்தியசாலை வீதி மற்றும் ஏ9 வீதியூடாக 9.45 அளவில் யாழ். மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

இதன்பின்னர், மாவட்ட செயலகத்தில் பல்வேறு நிகழ்வுள் இடம்பெற்று வருவதுடன், இந்த நிகழ்வில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே. தவலிங்கம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor