5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெறுவதற்கான விண்ணப்படிவம் வெளியீடு!!

அரசாங்கம் வழங்கும் 5000 ரூபாயைப் பெற்றுக்கொள்ள குடும்பங்களால் நிரப்பப்பட வேண்டிய விண்ணப்ப படிவத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கான கொடுப்பனவை வழங்குவதாக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.