பிரபாகரனை உயிருடன் கொழும்புக்கு கொண்டு வந்திருந்தால் மகிந்த ராஜபக்ஸ அவரை ஒரு முதலமைச்சர் ஆக்கியிருப்பார்! – பொன்சேகா

முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் sarath fonseka-2015நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன், இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இப்போது கூறப்படுவது போல பிரபாகரன் ஸ்ரீலங்கா இராணுவத்தினாரால் கொல்லப்படவில்லை, ஆனால் தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுள்ளார் என்று அவர் கூறியது ஒரு குளவிக் கூட்டை கலைப்பது போலிருந்தது.

எனினும் அவரது கூற்றை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளார், அவர் கூறியிருப்பது போர் முடிவடையும் வரை கருணா அம்மான் தனது பாதுகாப்புக்காக கிட்டத்தட்ட ஒரு சிறைக் கைதியை போல தனது சொந்த வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தார், அவருக்கு வெளி உலகத்தைப் பற்றியோ அல்லது பிரபாகரனின் மரணத்தைப் பற்றியோ கொஞ்ச நஞ்ச அறிவு கூட அப்போது இருக்கவில்லை என்று.

கேள்வி: கருணா அம்மான், வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசாங்கப் படைகளால் கொல்லப் படவில்லை ஆனால் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ளாரே. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: கருணா அம்மான் இப்போது தமிழர்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார். வரிகளுக்கு இடையில் வாசித்தால் இது உங்களுக்கு தெளிவாகப் புரியும். தான் ஒருபோதும் எல்.ரீ.ரீ.ஈயினை தாழ்த்தியதோ அல்லது எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இருந்ததோ கிடையாது என்று சொல்கிறார். கொழும்பில் பாதுகாப்பான ஒரு இடத்தில் இறுக்கமான பாதுகாப்புகளோடு கருணா அம்மான் வைக்கப் பட்டிருந்தார். வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள, ஒரு தொலைபேசி சம்பாஷணையை மேற்கொள்ளக்கூட அவருக்கு வழியேதும் இருக்கவில்லை, எனவே யுத்தக் களத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அறிவு அவருக்கு இருக்கவில்லை.

கேள்வி: அவர் பயனுள்ள தகவல் எதையும் தரவில்லையா?

பதில்: கருணா அம்மானிடம் தருவதற்கு பயனுள்ள தகவல்கள் எதுவும் இருக்கவில்லை. பிரபாகரனின் இளைய மகன் சரணடைந்தான் எனவும் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் சொன்னார். அவரது மகன் ஒருபோதும் சரணடையவில்லை. இராணுவம் அவரைக் கைது செய்யவில்லை. அவரது இளைய மகனைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் அந்த சிறுவனது உடலை நாங்கள் கண்டோம். அது எங்கு நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. இராணுவத்தின் ஷெல் வீச்சில் பிரபாகரனின் மனைவி, மற்றும் மகள் ஆகியோர் கொல்லப்பட்டதாக கேபி சொல்லியுள்ளார். அவரது மகள் ஒரு முன்னிலைப் போராளி, அவள் பெண்கள் அங்கத்துவப் பிரிவில் ஒரு லெப்.கேணல். அவரது மனைவியும் கூட முன்னிலை போராளிகளுக்கான விநியோக சேவையை கவனித்து வந்தார். அவர் ஒரு குடும்பத் தலைவியாக இருக்கவில்லை. அவர் முன்னணி நிலைகளை இயக்கி வந்தார். அவர்கள் முன்னணி நிலைகளில் கொல்லப் பட்டிருக்கலாம். அதற்கு சாத்தியம் உள்ளது. கேபி சொன்னதிலிருந்து கருணா தகவல்களைப் பெற்றிருக்கலாம்.

கேள்வி: பிரபாகரன் தற்கொலை செய்யவில்லை என ஏன் சொல்கிறீர்கள்?

பதில்: அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மண்டையோட்டின் முன்புறத்தின் ஒரு பகுதி வெளியேறியுள்ளது. அவர் ஒரு கைத்துப்பாக்கியால் தற்கொலை செய்திருந்தால் இது நடந்திருக்க முடியாது, அப்படி நடந்திருந்தால் ரவை நுழையும் முன்புறத்தில் சிறிய துவாரமும் மற்றும் அது வெளியேறிய மறுபுறத்தில் ஓரளவு பெரிய காயமும் இருக்க வேண்டும். ஒரு ரைபிள் அல்லது பெரிய துப்பாக்கி பயன்படுத்தியிருந்தால் அது நீளமாக இருப்பதினால் அதை தாடையின் கீழ் வைத்தே இயக்கியிருக்க முடியும். மண்டையோட்டில் இருந்து வெளியேறிய பகுதி அந்தக் காயம் ஒரு பெரிய ஆயுதத்தால்தான் ஏற்பட்டது என்பதற்கு பொருத்தமான ஆதாரமாக உள்ளது. அது ஒரு மோட்டார் குண்டின் பிளவுற்ற பகுதி அல்லது ஒரு பீரங்கிக் குண்டின் உலோகப் பகுதியால் ஏற்பட்டிருக்கலாம் என நாங்கள் நினைத்தோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, அவர் நந்திக்கடலேரியின் சதுப்புநிலக் காட்டுப் பகுதியில் இருந்து போரிட்டுள்ளார். கிட்டத்தட்ட 35 பேருடன் பிரபாகரன் அங்கிருந்தார். அந்தக் கட்டத்தில் நாங்களும் கூட ஏராளமான இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்தோம், இழப்புகளைத் தடுப்பதற்காக நாங்கள் மோட்டார்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்த வேண்டியிருந்தது.

கேள்வி: அவருடைய மரணத்துக்கும் மற்றும் அவரது உடலைக் கண்டு பிடிப்பதற்கும் இடையில் ஒரு நேர இடைவெளி காணப்பட்டதே?

பதில்: இறுதி யுத்தம் மே 17 கிட்டத்தட்ட மு.ப 2.30 மணியளவில் ஆரம்பமானது. அது மூன்று வௌ;வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவாகள் எங்கள் பாதுகாப்பு நிலைகளை உடைத்துக் கொண்டு காடுகளை நோக்கி நகர்வதற்காக முயற்சித்த இரண்டு இடங்களில் பாரிய சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மே 18, காலை 10.30 மணியளவில் இராணுவம் ஒரு இடத்தைப் பிடித்தது, மற்றும் இன்னொரு இடத்தை அதே நாள் பி.ப 1.30 மணியளவில் கைப்பற்றியது.

சதுப்பு நில பகுதியில் சிறு சிறு குழுக்களாக எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த போராட்டம் மே 18 இரவு தொடக்கம் மே 19 காலை வரை நடந்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மே 18ல், விரைவாக வெற்றியை கொண்டாடவும் மற்றும் அலரி மாளிகையில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடத்தவும் செய்தார். மே 19 காலை அவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார், ஆனால் அந்த நேரத்தில் கூட வீரர்கள் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் நிலங்களை விடுவித்து விட்டோம் ஆனால் யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

கேள்வி: அப்போதுதான் பிரபாகரன் கொல்லப் பட்டாரா?

பதில்: நான் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது அவரது உடலைக் கண்டு பிடித்து விட்டதாக எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அன்று காலை 10.30 மணியளவில் யுத்தம் நிறைவடைந்தது. அது ஒரு சதுப்பு நில பற்றைகள் நிறைந்த பெரிய சதுப்பு நிலப் பகுதி, ஏனைய பயங்கரவாதிகளின் உடல்களைக் கண்டுபிடிக்க நீண்ட நேரம் பிடித்தது.

கேள்வி: ஆனால் பிரபாகரனை கொழும்புக்கு கொண்டுவந்து அவரைச் சித்திரவதை செய்ததாகச் சொல்லப்படுகிறதே?

பதில்: அதெல்லாம் முட்டாள்தனம். நாங்கள் அவரைக் கொழும்புக்கு கொண்டு வந்திருந்தால் இன்று அவர் உயிரோடிருந்திருப்பார். இரண்டு வாரங்களுக்குள் மகிந்த ராஜபக்ஸ அவரை ஒரு முதலமைச்சர் ஆக்கியிருப்பார்.

கேள்வி: பிரபாகரனின் உடலுக்கு என்ன நடந்தது?

பதில்: வழமையான நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. காவல்துறையினர் வந்து எல்லாவற்றையும் பதிவு செய்தார்கள் டி.என்.ஏ சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. இறந்த அங்கத்தவர்களுக்கு இடையில் இருந்து அவரது மூத்த மகனின் உடலும் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு மேலாக கருணா அந்த இடத்துக்கு விமானத்தில் பறந்து வந்தார். அவர் உடனடியாக உடலை அடையாளம் காட்டினார். அதன்பின் எங்களுக்கு உடலை அகற்ற வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அந்த உடலுக்கு உரிமை கோர யாரும் இருக்கவில்லை.

கேள்வி: அது புதைக்கப் பட்டதா அல்லது தகனம் செய்யப்பட்டதா?

பதில்: தகனம் செய்யப்பட்டது.

கேள்வி: அவர் தற்கொலை செய்யவில்லை என்பதை நிச்சயம் செய்ய ஏதாவது ஒரு வழி உள்ளதா?

பதில்: ஆம். போர் நிறுத்தப் பட்டதும் அரை மணி நேரமாக நாங்கள் இறுதி சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருந்தோம், அப்போது நாங்கள் அதிக எண்ணிக்கையிலான உடல்களை கண்டெடுத்தோம், அவரும் அதில் ஒருவர். அவரது காயத்தின் தன்மையிலிருந்து அவர் தற்கொலை செய்யவில்லை என்பதை எங்களால் சொல்ல முடியும். நீங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உங்கள் தலையின் ஒரு பகுதியை உடைத்தெறிய வேண்டியதில்லை.

கேள்வி: அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதா?

பதில்: அதற்கு அவசியம் இருக்கவில்லை. யுத்தக் களத்தில் மரணங்களை அவர்கள் வித்தியாசமாகக் கையாள்வார்கள். காவல்துறையினர் வந்து வாக்குமூலங்களை பதிவு செய்தார்கள் பின்னர் உடல் அப்புறப் படுத்தப்பட்டது.

கேள்வி: தான் பிரிந்ததினால்தான் எல்.ரீ.ரீ.ஈயினை தோற்கடிப்பதில் இராணுவத்துக்கு ஏராளமானவற்றை செய்ய முடிந்தது என கருணா அம்மான் சொன்னார். இது பற்றிய உங்கள் கருத்து?

பதில்: இப்படித்தான் அது நடந்தது. சில நிதிக் கையாள்கையில் பிரபாகரன் அவர்மீது குற்றம் கண்டுபிடித்தார். பின்னர் முல்லைத்தீவில் பிரபாகரன் முன்பாகச் சமூகமளிக்கும்படி இவரிடம் கேட்கப்பட்டது. அதன் அர்த்தம் என்ன என்பது கருணாவுக்கு தெரியும் அதனால் அவர் போகவில்லை. மாறாக அவர் எல்.ரீ.ரீ.ஈயில் இருந்து பிரிந்து சென்றார். அவர் வெளியேறும்போது அவரிடம் சிறு தொகை அங்கத்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். பிள்ளையான் மற்றும் சுமார் 200 பேர் வரை, அவருடன் கூட வந்த அவர்களில் சிலர் சிறு பிராயத்தினர்.

அவர்கள் சேமாவதிக்கு அருகில் உள்ள சங்காவில் பகுதியில் ஒரு சிறிய காட்டுத் துண்டில் இருக்க விரும்பினார்கள், அது எங்கள் பதுங்கு குழி வரிசைகளுக்கு பின்னால் இருந்தது. எங்களுக்கு அதில் ஆட்சேபணை இருக்கவில்லை. கருணா கொழும்பில் மறைந்திருந்தார். கொழும்பில் உள்ள இரகசியமான இடம் ஒன்றில் வைத்து அவரது அங்கத்தவர்கள் சிலர் எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப் பட்டார்கள். இவை அனைத்தும் நடந்தது நான் இராணவத் தளபதியாக பொறுப்N;பற்பதற்கு முன்பு. அவரது வேண்டுகோளின்படி அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். நான் பதவியேற்றதின் பின் அவர் கொழும்பில் உள்ள இரகசிய இடமொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார்.

கேள்வி: அவர் தகவல் எதனையும் வெளிப்படுத்தவில்லையா?

பதில்: அவர் எந்த தகவலையும் தரவில்லை. உண்மையில் பல தடவைகள் எனது அலுவலகத்தில் வைத்து அவர் என்னைச் சந்தித்துள்ளார். அவரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்த தகவல்கள் பிரபாகரனின் மறைவிடங்கள், கனரக துப்பாக்கிகளின் சரியான இருப்பிடம், போன்றவையே. ஆனால் அவர் அப்படியான எதனையும் வழங்கவில்லை. புதுக்குடியிருப்பை நாங்கள் கைப்பற்றிய பின்னரே பிரபாகரன் எங்கு மறைந்திருந்தார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

கேள்வி: பிரபாகரன் உண்மையில் தற்கொலை செய்திருந்தால், அது ஜெனிவாச் சுமையினை குறைக்காதா?

பதில்: அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர் யுத்தக்களத்தில் கொல்லப் பட்டார், ஒரு துப்பாக்கி சூட்டு பரிமாற்றத்தில் பிரபாகரனை கொன்றதுக்கு எங்கள் மீது யாரும் பழி கூற முடியாது. அது ஒரு கடினமான பிரதேசம் ஒரு சதுப்பு நிலம். அவர்கள் இயந்திர துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளார்கள். அது கொழும்பில் ஒரு கள்வனைப் பிடிக்க முயற்சிப்பதைப் போன்ற ஒரு விடயமல்ல.

கேள்வி: ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயினால் மீள் எழுச்சி பெற முடியும் என நீங்கள் நினைக்கிறீhகளா?

பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசாங்கம் நல்லிணக்கம் போன்ற அது தொடர்பான விடயங்களை உரிய முறையில் கையாளாவிட்டால் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பயங்கரவாத இயக்கங்கள் தோன்றலாம். தெற்கில் இரண்டு வன்முறைக் கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் அந்த நேரத்தில் இருந்த இயக்கங்கள் இப்போது இல்லை. கேபி யின் பிரச்சினை போன்ற சில குறிப்பிட்ட பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாங்கள் எற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் அவர் பெரிய அளவில் இருந்து வருகிறார் மற்றும் அவருக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.

கேள்வி: ஆனால் கேபி மீது வழக்குத் தொடர்வதற்கு சாட்சிகள் இல்லை என்று சட்டமா அதிபர் கூறியுள்ளாரே?

பதில்: சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு சட்டமா அதிபர் பொறுப்பானவர். நல்லாட்சி அரசின் பாதுகாவலர்கள் தங்கள் கடமையை உண்மையாக நிறைவேற்ற வேண்டும்

சட்டமா அதிபர் நாட்டுக்கு துரோகமிழைக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். கேபி ஒரு பயங்கரவாதி இல்லை என்று அவர் சொல்வாரானால் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பாக எந்த இடத்திலும் அவருடன் ஒரு விவாதம் நடத்த நான் தயார். கேபி எல்.ரீ.ரீ.ஈ சீருடையில் இருந்ததை காட்டும் புகைப்படங்கள் உள்ளன. கேபி வெளிநாடுகளில் நிதி திரட்டி ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் கொள்வனவு செய்து இங்குள்ள எல்.ரீ.ரீ.ஈ க்கு அனுப்பியதை இராணுவத்தில் உள்ள ஒரு சாதாரண சிப்பாய் கூட அறிவான். போதுமான ஆதாரங்கள் உள்ளன. கேபி தொடர்பான உளவுத்துறை விளக்கங்களுக்கு நான் தலைமை தாங்கியுள்ளேன். மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் பயங்கரவாதிகளில் கேபியும் ஒருவர்.

கேள்வி: சட்டமா அதிபரின் அறிக்கைக்கு பின்னாலுள்ள காரணங்கள் என்னவாக இருக்கும்?

பதில்: கேபியை பாதுகாத்த முன்னைய ராஜபக்ஸ ஆட்சியினர் அவருடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளனர். அவருக்கு சொந்தமாக ஒரு தொகை கப்பல்கள் இருந்தன, மற்றும் அவரது பொறுப்பில் பெருந் தொகையான எல்.ரீ.ரீ.ஈயின் பணம் இருந்தது. அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. முந்தைய ஆட்சியின் உச்சத்தில் இருந்த நபர்கள் இந்தப் பணத்தை விளையாடி இருக்கலாம் என நாங்கள் சநதேகிக்கிறோம். சட்டமா அதிபர் அதை மறைக்க முயற்சிக்கலாம், ஏனென்றால் அவர் முந்தைய ஆட்சியினரால் நியமிக்கப் பட்டவர். அவர்களின் கீழ் அவர் ஒரு கைப்பாவையை போல இயங்கியவர், இன்னமும் அவர் அவர்களின் கட்டளைகளைப்படி நடக்கலாம்.

கேள்வி: யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரணை செய்ய ஒரு உள்ளக பொறிமுறை முன்மொழியப் பட்டுள்ளதே. உங்கள் கருத்து என்ன?

பதில்: அது ஒரு நல்ல விடயம். மற்றவர்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்பு அரசாங்கம் அதை நடத்தியிருக்க வேண்டும், ஐநாவோ அல்லது ஒரு வெளிநாடோ அதை பரிந்துரை செய்வதற்கு முன்பாக.

கேள்வி: யுத்தக் களத்தில் விதி மீறல்கள் இடம் பெற்றிருக்கலாம் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: இல்லை! விதி மீறல்கள் இடம் பெற்றிருக்கலாம் என்று நான் சொல்லவில்லை. நான் சொல்வது என்னவென்றால், குற்றச்சாட்டுகள் எழுந்தால் பாரபட்சமற்ற ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் நம்பிக்கையான சான்றுகள் இருந்தால் அப்போது மீறல்கள் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Recommended For You

About the Author: Editor