450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரீமா நிறுவனத்தினால் வெளியிடப்படடுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கயை கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஒரு கிலோ கிராம் மா வின் விலை 243.5 சதத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.