4 வயது சிறுவன் கடத்தல்: தகவல் தருமாறு பொலிஸ் கோரிக்கை

அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் தந்தை மற்றும் தாயை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனான தமிந்து யஷின் ஏக்கநாயக்கவை கடத்திசென்றோர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கைவிடுத்துள்ளது.

Danidu-Yashen-4-year-boy

முகங்கள் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரே வீட்டிலிருந்த பெற்றோரை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனை கடந்த திங்கட்கிழமை இரவு கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகரிடம் இருந்து கப்பம் பெறும் நோக்கிலேயே சிறுவன் கடத்தப் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுவனை கடத்தியோர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறிகுணவர்தன (தொலைபேசி இலக்கம்- 071-8137007) அல்லது நிக்கவரெட்டிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சந்தன அலஹகோன்( தொலைபேசி இலக்கம்- 077-4784635) ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமை அலுவலகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor