30 க்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு காலக்கெடு – அரசாங்கம்

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது.

குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், ஒருசிலர் பல்வேறு காரணங்களால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பதாக கூறினார்.

குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை நிர்வகிக்க முடியாது என்றும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த வாரம் நிறைவடையவிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அதற்காக மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor