- Tuesday
- June 9th, 2026
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் நேற்றிரவு சாவகச்சேரி பொலிஸாரின் உதவியுடன் கிராம மக்கள் இணைந்து...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் 19 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றுடன் 318 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 302 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் 04 என்புக்...
எதிர்வரும் புதன்கிழமை (10.06.2026) மற்றும் வியாழக்கிழமை (11.06.2026) ஆகிய தினங்களில் திருநெல்வேலிச் சந்தி, ஆடியபாதம் வீதி பகுதியில் தார்படுக்கை (Carpet) இடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, வரைபடத்தில் சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள வீதிப் பகுதி, மேற்குறிப்பிட்ட நாட்களில் போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பணிகள் சிறப்பாக நடைபெற...
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
