நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் நீடிப்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் ஆகஸ்ட் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் நாளை வியாழக்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 7 தமிழக...

இடிந்து விழுந்தது சங்கிலிய மன்னனின் மந்திரிமனை!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டிருந்ததால், அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அதேவேளை மந்திரிமனையை புனரமைக்கும் பணிகளும்...
Ad Widget

தமிழ் – முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இணைந்துதான் செயற்பட வேண்டும்!

தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து விடுவதாக இல்லாமல், மாறாக அவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய...

நெடுந்தீவு வாள்வெட்டு – இருவர் காயம் – பொலிஸார் மீதும் தாக்குதல்

நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகிறதாவது… நெடுந்தீவு மதுபானசாலையில் இன்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர் குழு, மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு...

சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் புதன்கிழமை (செப்டம்பர் 17) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் "வேலைக்கு ஏற்ற ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் என மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றாததால், இந்த சுகயீன...