- Saturday
- June 14th, 2025

விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் அண்மையில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. நாடாளுமன்றத்தில் கூறிய கூற்றை பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஓய்வுவெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா,...

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். ஈழ...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச நியமனம் வழங்காது 3 வருட காலத்துக்கு சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்கள் தன்னார்வ முறையில் பணியாற்றியுள்ளனர் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில்...

அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன. 2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ,...

தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது....