- Thursday
- April 24th, 2025

கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553வது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியினால் கையளிக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட பரந்தன் இரசாயன...

சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்று வியாழக்கிழமை (03) மாலை வந்தடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை...

சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (02) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ஆளுநரிடம்,...

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள்...