எரிபொருள் விநியோக சீர்குலைப்பு – சி.ஐ.டியில் முறைப்பாடு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் சலுகை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையால் எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு முயற்சிப்பதாகவும், இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறைப்பாடு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் திகதி அறிவிப்பு!!

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Ad Widget

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இறுதி அறிக்கை 6 வார காலத்தில்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 27ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு...

மக்கள் நலனுக்காக தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார்!

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்பு விடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயமிருக்கும் என தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூர் ஆட்சி மன்ற...

செம்மணிப் புதைகுழி ஆதாரங்கள் அழிக்கப்படும் ஆபத்து!

செம்மணி மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றுகையில், "கொக்குத்தொடுவாய் பகுதியிலும், மன்னார் பிரதேசத்திலும்...

பருத்தித்துறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு!

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்ற பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த லொறியில் பயணித்த உதவியாளர் காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைப்...