இளைஞர்கள் இடையே வேகமாக பரவும் எய்ட்ஸ்!

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான எச்.ஐ.வி தொற்றுக்களில் 15 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்...

உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 30, டிசம்பர்...
Ad Widget

விசுவமடுவில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை!

முல்லைத்தீவு, விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடொற்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற வானிலையால்...

மாவீரருக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! கொட்டும் மழையிலும் திரண்ட மக்கள்!!

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம்...

கைதடியில் பூசகரை கட்டிவைத்துவிட்டு கொள்ளை! பெண் ஒருவர் கைது!!

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்று(27) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள்...

திருகோணமலைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு சாத்தியம் !

சக்தி மிக்க தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பது இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இந்த தாழமுக்கமானது, மெதுவாக நகர்ந்து செல்கின்றது. மேலும் தீவிரமடைவதுடன் இன்று சூறாவளியாக வலுவடைந்து இலங்கையின் கிழக்குக்...