- Thursday
- November 7th, 2024
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (10) கையளித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ச.சுகிர்தன், கே.சயந்தன், இமானுவேல் ஆர்னோல்ட், தி.பிரகாஷ், ச. இளங்கோ, ச. சுரேக்கா, சி.கிருஷ்ணவேணி ஆகியோர் போட்டியிடவுள்ளனர்....
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். 13 ஆம் திகதி கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்போடு கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொதுமக்கள்...
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நான்கு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று புதன்கிழமை (09) 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களையும் , படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற கடற்படையினர் ,...
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (10) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வட...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால்...
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ஆம் திகதி உத்தரவிட்டது. நேற்றையதினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது...