- Monday
- December 11th, 2023

தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீதியில் யாரும் அற்றவேளை குறித்த பெண்ணை...

மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், அவர்களின் அடையாளர்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாக தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (19) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தானும் தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரமான ச. கீதனும் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த அவர்,...

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றுமுன்தினம் (18.11.2023) மீட்க்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 14ஆம் திகதி...

மாவீரர் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (19) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த சிரமதான பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே...