Ad Widget

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் நிலையில் இந்த அழைப்பு பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்க உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சபாநாயகரிடம்...
Ad Widget

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முன்னணியின் உறுப்பினர் கைது

முல்லைத்தீவு-வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் மருதங்கேணி...

கஜேந்திரகுமார் – புலனாய்வாளர்கள் முறுகல்! வெடித்தது புதிய சர்ச்சை

யாழ்ப்பாணம்-மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மக்கள் சந்திப்பு இடம்பெற்ற இடத்தை அண்மித்து சாதாரண தர பரீட்சை மத்திய நிலையம் அமைந்திருந்த நிலையில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையிலேயே...

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள். நாகஞ்சசோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (05.06.2023) அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர் புதையல் தோண்ட முற்பட்ட 8...

ரஷ்ய படைக்குள் கடும் மோதல்!

ரஷ்ய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலை ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை சிறைப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. பக்முத்-தில் இருந்து வாக்னர் படைகுழு வெளியேறும் வழியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்ததாக வாக்னர் படை குழுவின் தலைவர் பிரிகோஜின்(Prigozhin) குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பக்முத் இருந்து வெளியேறும் போது வாக்னர் PMC படை மீது வெடிகுண்டு...