Ad Widget

தேர்தலை நடத்த கோரி யாழில் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சி...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Ad Widget

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

வடக்கின் நுழைவாயில்” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார்....

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என இரத்த வங்கி அறிவித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி 49...

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது.

ஊடகங்களை அனுமதிக்காத அரச அதிபர்!! ஊடகவியலாளர்களை உள்ளேவருமாறு அழைத்த டக்ளஸ்!!

யாழ்.மாவட்டச் செயலர் சிவபாலசுந்தரன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக ஊடகவியலாளர்களை உள்ளேவருமாறு அழைத்தார். கடந்த காலங்களில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு...

இராணுவத்தினருடன் மதுபோதையில் தர்க்கம்!! இரு இளைஞர்கள் கைது!!

யாழ்.நீர்வேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருடன் மதுபோதையில் தர்க்கம் புரிந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து சென்ற இராணுவத்தினரின் துவிச்சக்கர வண்டிகளுக்கு குறுக்கே மோட்டார் சைக்கிளை விட்டு தர்க்கம் புரிந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய கோப்பாய் பூதர்மடம் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய இழுவை படகுகள் மீண்டும் அட்டகாசம்!

யாழ் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. சுமார் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவை படகுகளால் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் திருவடி நிழலை கடற்பரப்பிலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருந்தமை...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ்...