Ad Widget

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் கைது

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு டிரக்கை சோதனை செய்த போது 17 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் அதில் இருந்துள்ளனர் மற்றைய டிரக்கில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும்...

75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக...
Ad Widget

விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக 30, 31 ஆம் திகதி பிரகடனம்!

இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் மொத்தம் 75,434 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2021 இல் பதிவான எண்ணிக்கையை விட...

வியட்நாம் கடற்பகுதியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் இலங்கைக்கு

வியட்நாம் கடற்பகுதியில் சிக்கியிருந்த 152 இலங்கையர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் நேற்று (27) இரவு விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வியட்நாம் கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, ​​படகு மூலம் நாட்டை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்தோர்...

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம்!

08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும்...

தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டி – இன்னும் தீர்மானம் இல்லை என்கின்றார் சம்பந்தன்

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில்...

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

வட்ஸ்அப் (whatsapp) செயலியூடாக வீசா மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளது. அத்தோடு, வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு...

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு: ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் பெரும் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு...