Ad Widget

நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது!! – றவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் எச்சரிக்கை!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண்துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றினைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை...

நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக உள்ள நெடுந்தீவு பகுதியில் 550 வருடம் பழைமை வாய்ந்த மரம், வெளிச்சவீடு, ஒல்லாந்தர்...
Ad Widget

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (புதன்கிழமை) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. ஈழ...

ஜனவரி மாதம் மின் கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும் !

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார பிரச்சினையில் மக்களை தவறாக வழிநடத்தும் மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும்...

யுக்ரைன் ஜனாதிபதி இன்று அமெரிக்கா செல்கிறார்!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலேன்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் இன்று புதன்கிழமை சந்திக்கவுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், யுக்ரைனுக்கான இராணுவ உதவிகள் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்படும் எனவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பேச்சுவார்த்தை விபரங்கள் வெளியிடப்படவில்லை. ...

நாளை முதல் முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. குறைக்கப்பட்ட விலைகள் டிசம்பர் 21 முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெரிய வெங்காயம் 5 ரூபாய் குறைக்கப்பட்டு 185 ரூபாயாகவும் சிவப்பு பருப்பு 7 ரூபாய் குறைக்கப்பட்டு...

டக்ளஸ் தரப்பினரின் தீர்மானத்தினால் சிக்கலில் மணிவண்ணன்!

யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க...

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்!

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை...

தீவிரமடையும் டெங்கு நோய் தொற்று! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2023 ஆம் ஆண்டு நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தேசிய...