Ad Widget

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!!

புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் ஊழியர்களின் முயற்சியின் பயணாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 1200 பணியாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீ ஏற்பட்ட வேளையில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஊழியர்களின் கடின முயற்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது மின்சாரம் தாக்கியதில் பணியாளர்...

5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றது அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை !

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும். இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக...
Ad Widget

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் , அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்துள்ளாா். அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இறைபதமடைந்த விஜயநாதனின் இறுதிச் சடங்குகள் அன்னாருடைய இல்லத்தில் இன்றைய தினமே இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது....

கோவில் பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும்! – ரத்தினசபாபதி குருக்கள்

ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்துக்கள் ஆகிய நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலய ஆதீன குரு ரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாவலர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். வரலாற்று பிரசித்தி பெற்ற காரைநகர் சிவன் ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்வதா? திருவம்பாவை உற்சவத்தினை நடத்துவதா?...

இறக்குமதி செய்யப்படும் 10 பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று(செவ்வாய்கிழமை) முதல் அமலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு துறை அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் என்பன இதில் அடங்குவதாக...

மியன்மார் அகதிகள் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைப்பு!

யாழ்.மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ். சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்....

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து கைது செய்துள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உயர்வடைய கூடும்!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்....

யாழ். மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

யாழ்.மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று திங்கட்கிழமை(19.12.2022) நள்ளிரவு முதல் குறைவடைந்து 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து முடிவெடுத்துள்ளன. சனிக்கிழமை (17) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை பத்து...