Ad Widget

வீதிகளை புனரமைக்க கோரி சங்கானையிலும் மூளாயிலும் கவனயீர்ப்பு போராட்டம்!!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுத்தாகவும் அதனால் வீதியை புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையிலையே இன்று இப்போராட்டம்...

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு!!

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு இருந்தமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவன் ஊசி மூலம்...
Ad Widget

எல்லை தாண்டி மீன்பிடித்த 23 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த இருபத்துமூன்று இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதானவர்கள்...

மண்ணெண்ணெய் விநியோகம் இன்று ஆரம்பம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினையைத் தீர்த்து வைத்த அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் 3 நாட்களில் அனைத்து விவசாயப் பகுதிகளுக்கும் மண்ணெண்ணெயை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இம்மாதம்...

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற 80 வீதமான பாடசாலை வருகை தேவை – கல்வி அமைச்சு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 80 வீதமான பாடசாலை வருகைத் தேவை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சு 8இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

மானிப்பாயில் இளைஞன் மீது படையினர் தாக்குதல்!

மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைத்து மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதிக்காது , பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். மானிப்பாய் ஆலடி சந்தியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு...

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற்றின் விலையை 175 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற் ஒன்றின் புதிய விலை 175 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு...

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும்...