Ad Widget

சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்!! திருநெல்வேலி சிறுவர் பராமரிப்பு நிலைய காப்பாளர் கைது!!

யாழ்.திருநெல்வேலியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 12 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்க கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர். அதன் அடிப்படையில் விடுதிக் காப்பாளரான குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின் சந்தேக...

யாழ். மாநகர மேயருக்கும் ஐ.நா. சபையின் குழுவினருக்கும் இடையே விஷேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு,...
Ad Widget

பாடசாலை உபகரணங்களின் விலை தொடர்பான அறிவிப்பு!!

செஸ் வரி திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். [caption id="attachment_115903" align="aligncenter" width="548"] Stationery isolated on white[/caption] இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். செஸ் வரி மாற்றத்தால் பாடசாலை...

சட்டவிரோத காலபோக நெற்செய்கையால் கிளிநொச்சியில் அமைதியின்மை!

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில், சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டினால், அங்கு அமைதியின்மை நிலவியது. நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனை, அழிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் சென்ற வேளை, அவர்களுக்கும் சட்டவிரோதச் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான...

யாழில் கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி!

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகையில் மரநடுகை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வருவதோடு, மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடாத்தி வருகின்றது. இவ்வருடமும் மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் வகையில் இம்மாதம் இன்று 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள...

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – வலிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிப்பு!

ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் உதவிச் செயலாளரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும்...

இனப்பிரச்சினைக்கான தீர்வாக சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம் – சித்தார்த்தன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் தெரிவுக் குழு, ஆணைக்குழு அமைத்து நிதியை செலவு செய்யாமல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்த பிராந்தியங்களின் ஒன்றிய தீர்வு திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம். விட்டுக் கொடுப்புடன் அரசாங்கமும் செயற்பட வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.17) இடம்பெற்ற...

நாட்டின் சில பகுதிகளில் மழை, பலத்த காற்று வீசக்கூடும்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை சனிக்கிழமை (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை நெருங்குவதற்கு அதிக...

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு முக்கிய தகவல் – கிடைக்கவுள்ள சலுகைகள்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான்...

ரஷ்யா படைகள் வெளியேறும் வரை உக்ரைனில் அமைதிக்கு சாத்தியமில்லை:ஜோசப் பொரெல்

ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறும் வரை உக்ரைனில் அமைதி சாத்தியமில்லை, ஆனால் மாஸ்கோ அவ்வாறு செய்யத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கும் போதே பொரெல் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,ரஷ்யா தனது...