Ad Widget

இலங்கை அகதிகள் சிலர் ருவாண்டாவிற்கு அனுப்பி வைப்பு!!

டியகோ கார்சியா தீவில் தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக "The New Humanitarian" இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியகோ கார்சியா தீவுக்கு சுமார் 200 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய...

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே...
Ad Widget

வடக்கு மாகாண ஆளுநர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் போது ஆராய்ந்தார்.

சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் இதில் பங்கேற்ற நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின்...

விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் – அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு !

அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு எடுத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உட்துறை அமைச்சில் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....

ரணில் இனப் பிரச்சினை தீர்வுக்கு தமிழ் தரப்பை அழைப்பது ஓர் நாடகம் – கஜேந்திரகுமார்

இலங்‍கையில் சமஷ்டியாட்சி‍ முறையை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என 2021 இல் கூறிய ரணில் விக்கிரமசிங்க தற்போது இனப் பிரச்சினை தீர்வுக்கு காண்பதாக கூறி, தமிழ் தரப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது ஓர் நாடகமாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் கடுமையாக சாடினார். நாட்டில் ஒற்றையாட்சி முறையை...

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்!!

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்படாததையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை. அந்த வருடம் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் – மானியம் வழங்குவதில் நெருக்கடி!

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். கருவூலத்தில் இருந்து, தினசரி பணப்புழக்கத்தை கையாள்வது எவ்வளவு...

மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட போர் கைதிகள்! ஐ.நா பகிரங்க குற்றச்சாட்டு

ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் போர் கைதிகளை சித்திரவதை செய்ததாக ஐ.நா மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. இருதரப்பிலும் விடுவிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட போர் கைதிகளிடம் ஐ.நா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் ராணுவத்தினரை நாய்களை விட்டு கடிக்கவைத்தும், நிர்வாணப்படுத்தி உடலில் மின்சாரம் பாய்ச்சியும் ரஷ்ய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளது தெரியவந்தது. அதேபோல் உக்ரைன்...