Ad Widget

சீரற்ற காலநிலை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போது சீரற்ற கால நிலையினால் ஏற்படவுள்ள பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாத்தல் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உடனடி உதவிகள் வழங்கல் , மற்றும் நிவாரணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது. மாவட்ட...

கோவில் பிரச்சினை – அவுஸ்திரேலிய நாட்டவர் மீது வாள்வெட்டு

கோவில் பிரச்சினை தொடர்பாக வடமாகாண அளுநரிடம் முறையிட்ட அவுஸ்திரேலிய நாட்டவர் மீது இன்று காலை வாள்வெட்டுக் குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பண்டத்தரிப்பில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நீண்டகாலமாக நிர்வாகத்தில் மோசடி இடம்பெற்று வருவதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பண்டத்தரிப்பை சேர்ந்த கோயிலுக்கு நிதி பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வரும் நபர் ஒருவர்...
Ad Widget

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம் சிவசாமியும் கலந்து கொண்டார். நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லண்டனில் முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கு அமைய 8 அரசியல்...

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குறித்த தகவல் வெளியானது

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கே சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்குச் செல்லுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து வந்த 42 வயதுடைய குறித்த இலங்கையர் காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு, அவருக்கு...

இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை!! – இராணுவம்

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் நிரோஸ் குமார் என்பவரின் தகவலறியும் உரிமை விண்ணப்பம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு கூடியபோது, அதன் முன்பாக காணொளி காட்சி மூலம்...

கெர்சன் நகரில் இருந்து இராணுவம் வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு

உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 9 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்ய படைகள் வசம் சென்றுள்ளன. இந்த சூழலில் உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய இராணுவத்தினர்,...