Ad Widget

53 வயதான வெளிநாட்டவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்துவதாக அச்சுவேலி சிறுமி வாக்குமூலம்!

நெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு தன்னை தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 வயதான சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமி பிரான்ஸ் நாட்டில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பியிருந்த 20 வயதான இளைஞனுடன்...

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் முகமாலையில் சோதனை!

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரம்களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற...
Ad Widget

மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்!!

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மலேசியாவிற்கு விமானம் மூலம் வேறு நாட்டுக்குச் செல்வதற்காகவே இந்தக் கப்பலில் இந்தக் குழுவினர் ஏறியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில்...

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில் , இருவேறு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், வீதியில் சென்ற பெண்ணொருவரின் 3 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி , மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில்...

வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது – நாகவிகாரையின் விகாராதிபதி

வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி வடக்கு மீனவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆரிய குளம் நாகவிகாரை விகாராதிபதியை வடக்கு மீனவர்கள் கடலட்டை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி பயின்ற மாணவர்களே அந்தப் பரீட்சைக்கு...

அதிகார பலம் உள்ளோரின் ஆதரவோடு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கௌரவத்தோடு வலம் வருகிறார்கள்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையையும் கடத்தலையும் தடுக்கும் நோக்குடன் முதன்மை வீதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர், மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அன்றாட வாழ்கைக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் போதாது என்ற ரீதியிலா...

இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் நேற்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோடு...

ரஷ்யாவுடனான முக்கிய ஒப்பந்தத்தை நீட்டிக்கும் உக்ரைன் ஜனாதிபதி!

கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நீட்டிக்க முயல்வதாக அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால், கருங்கடலை சுற்றியுள்ள தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இந்த மோதல் உலகெங்கிலும் உள்ள உக்ரைன் துறைமுகங்களில் இருந்து கோதுமை மற்றும் பிற தானியங்களை கொண்டு செல்வதில் தடை உண்டானது. எனினும், கடந்த சூலை...